Ayalaan Collection: அயலான் வசூல் எவ்வளவு தெரியுமா?

0
77

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அயலான் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது.

ஏலியனை வைத்து ஒரு சுவாரசியமான நகைச்சுவை கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர். இந்த படத்தின் பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படப்பிடிப்பு ரத்தானது.

கிட்டத்தட்ட 50 நாட்கள் எடுக்கவேண்டிய காட்சிகள் படமாக்கப்படாமல் இருந்தது. மீதம் இருந்த அந்த காட்சிகளைப் படமாக்கி முடிக்க மூன்று வருடங்களாகியதாக இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற விஷயங்கள் இருப்பதால் படம் திரைக்கு வர தாமதமானது. தொடர்ந்து, அயலான் பட வெளியீட்டுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து.

அந்த தடைகளை தாண்டி பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அயலான் ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வந்தது. தொடர்ந்து அயலான் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதனிடையே அயலான் திரைப்படம், முதல் இரண்டு நாள்களில் உலகளவில் ரூ. 19 கோடியை வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொங்கல் பண்டிகை காரணமாக தொடர் விடுமுறை இருப்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here