‘Ayalaan Making Video’: ‘உங்களது கடினமான உழைப்பிற்கு வாழ்த்துகள்’ – ரசிகர்கள் கமெண்ட்..!

0
179

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அயலான் திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தொடர்ந்து இந்த படத்திற்கு பாசிடிவ் கமெண்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தற்போது அயலான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு யூடியூப்பில் வெளியிட்டது. இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். பலரும் இந்த வீடியோவை பார்த்து படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ‘இந்தப் படத்திற்காக செலவழிக்கப்பட்ட நேரமும், உழைப்பும் அபரிமிதமானது. அயலான் படக்குழு தங்களது இலக்கை அடைந்துவிட்டது. ஒவ்வொரு நொடியும் ரசித்து பார்த்தோம்’ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தொடர்ந்து, அயலான் 2ஆவது பாகத்தை உருவாக்க துடிக்கும் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: வியந்து பார்த்த நடிகர்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here