வைரலாகும் அயலா அயலா ப்ரோமோ வீடியோ..!

0
137

‘Ayala Ayala Promo’: இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அயலான் திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளதால் ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது ‘அயலான்’ படத்தின் அயலா அயலா வீடியோ பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. யூடியூப்பில் வெளியான இந்த ப்ரோமோவிற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘லால் சலாம்’ ஆடியோ லான்ச்.. ரஜினியின் ஸ்பீச்சுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here