ஓடிடியில் வெளியாகும் ‘அயலான்’..! எப்போ தெரியுமா?..

0
81

‘Ayalaan OTT’: இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அயலான் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது.

ஏலியனை வைத்து ஒரு சுவாரசியமான நகைச்சுவை கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அயலான் ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வந்தது. தொடர்ந்து அயலான் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரையரங்குகளில் வெளியான படம் ‘அயலான்’. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படம் வரும் 9ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here