அயலான் பட தயாரிப்பாளர் கே.ஜி.ஆர்.ராஜேஷ் மருத்துவமனையில் அனுமதி..!

0
125

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அயலான்’. சயின்ஸ் பிக்சன் படமாக எடுக்கப்பட்டிருந்த இப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதுவரை இந்தப் படம் சுமார் 75 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. படத்தின் பட்ஜெட்டை விட குறைந்த அளவிலான வசூல் மட்டுமே கிடைத்துள்ளதால் பட குழுவினர் கடும் அப்சட்டில் உள்ளனர்.

இந்த நிலையில், அயலான் பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கே.ஜி.ஆர் நிறுவனத்தின், தலைவர் ராஜேஷ் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜேஷுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இது குறித்த தகவலறிந்த அயலான் படக்குழிவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here