‘அயலான்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு?..

0
55

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏலியனை வைத்து ஒரு சுவாரசியமான நகைச்சுவை கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர்.

இந்தப் படம் ஜனவரி பொங்கலுக்கு வெளிவரும் என கூறப்பட்டு வந்த நிலையில் இடையில் படம் ரிலீஸ் ஆகுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனையும் தாண்டி தற்போது ‘அயலான்’ பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், தற்போது ‘அயலான்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘அயலான்’ படத்தின் டிரைலர் ஜனவரி 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் ‘அயலான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘Captain Miller’: ‘கேப்டன் மில்லர்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here