வெளியானது ‘அயலான்’ டிரைலர்..! ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு!

0
65

Ayalaan Trailer: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏலியனை வைத்து ஒரு சுவாரசியமான கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ரவிக்குமார்.

இந்தப் படம் ஜனவரி பொங்கலுக்கு வெளிவரும் என கூறப்பட்டு வந்த நிலையில் இடையில் படம் ரிலீஸ் ஆகுவதில் சிக்கல் ஏற்பட்டது. இருந்தபோதிலும் தற்போது ‘அயலான்’ படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது ‘அயலான்’ படத்தின் டிரைலர் இந்திய நேரப்படி இரவு 8:07 மணிக்கு தமிழ், தெலுங்கில் வெளியாகியுள்ளது. மேலும், ‘அயலான்’ டிரைலருக்காக ரசிகர்கள் வெகு நாட்களாக காத்திருந்த நிலையில் தற்போது டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: வெளியானது அருண் விஜய் நடிக்கும் ‘Mission Chapter 1’ டிரைலர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here