Lucky Baskhar: இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘துல்கர் சல்மான்’ நடிக்கும் படம் ‘லக்கி பாஸ்கர்’. இந்த படத்தில் மீனாட்சி செளத்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தை ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சாய் சௌஜன்யாவுடன் இணைந்து சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி இப்படத்தை தயாரிக்கிறார்.
ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் இப்படத்தை வழங்குகிறது. நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில், தற்போது படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் நடிகை ஆயிஷா கான் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் 80களில் இருந்த மும்பையை பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.