ரன்னிங் ரேஸில் மீண்டும் குரு..! ரீரிலீஸாகும் ‘அழகிய தமிழ் மகன்’..!

0
139

Azhagiya Tamil Magan: பரதனின் இயக்கத்தில் எசு.கே.சீவாவின் திரைக்கதையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அழகிய தமிழ் மகன்’. 2007 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் மெகா ஹிட்டடித்தது.

இந்த படத்தில் நடிகர் விஜய் முதன்முறையாக இரட்டை வேடங்களின் நடித்தார். ஒரு விஜய் கதாநாயகனாகவும், மற்றொரு விஜய் வில்லனாகவும் நடித்திருந்தார்.

விஜய்க்கு ஜோடியாக சிரேயா மற்றும் நமிதா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் டிரெண்டிங்கில் உள்ளன.

இந்த நிலையில், தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘அழகிய தமிழ் மகன்’ படம் ரீரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் வருகிற மார்ச் 22ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் ரீரிலிஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here