‘Lover’: இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கும் படம் ‘லவ்வர்’. இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீகவுரி பிரியா நடிக்கிறார். மேலும், கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படமானது கல்லூரியில் இருந்து ஆறுவருடங்களாகப் பெண் ஒருவரை காதலித்து வரும் இளைஞருக்கும், அப்பெண்ணிற்கும் இடையில் இருக்கும் உறவுச்சிக்கலை விவரித்துப் பேசுகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. ‘லவ்வர்’ திரைப்படம் வருகிற 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் ‘லவ்வர்’ படத்தில் இடம்பெற்றுள்ள 18 கெட்ட வார்த்தைகளை நீக்க தணிக்கை குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு U/A சான்றிதழையும் தணிக்கை குழு வழங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.