Bade Miyan Chote Miyan: இயக்குநர் அலி அப்பாஸ் ஸாஃபர் இயக்கத்தில் இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்திருந்த படம் ‘படே மியன் சோட்டே மியன்’. இந்த படத்தில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் நடிக்கின்றனர்.
மேலும், இந்த படத்தில் பிருத்விராஜ் சுகுமாறன், சோனாக்ஷி சின்ஹா, ஆல்யா மற்றும் மனுஷி சில்லர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், தற்போது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘படே மியன் சோட்டே மியன்’ என்ற படத்தின் டிரைலர் வருகிற மார்ச் 26ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் டிரைலர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகிறது.