‘Best Villain of 2023’: வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை மயக்கிய நடிகர்கள்!

0
125

Best Villain of 2023: தமிழ் சினிமாவில் 20232ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை மிரட்டிய நடிகர்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்..

தமிழ் சினிமாவில் 2023ஆம் ஆண்டு வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட்களாக பல படங்கள் உச்சத்தை எட்டியது. ஒரு திரைப்படத்தின் வெற்றியில் கதாநாயகர்கள் எந்த அளவிற்கு முக்கியப் பங்கு வகிக்கிறார்களோ அந்த அளவிற்கு வில்லன்களுக்கும் முக்கியத்துவம் உள்ளது.

சினிமாவில் நடிகர்கள் தங்களது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பெறுகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவில் 2023ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சிறந்த ஐந்து வில்லன்கள் குறித்து பார்க்கலாம்.

‘ஜெயிலர்’ விநாயகம்:

தமிழ் சினிமா வில்லன்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தனது வில்லத்தனமான நடிப்பை வெளிக்கொண்டு வந்தவர் ‘விநாயகம்’. நெல்சன் இயக்கத்தில் ரஜினி காந்த் நடிப்பில் வெளியாகி உலக அளவில் ஹிட்டான படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் நடித்த விநாயகம், ‘வர்மன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது நடை, உடை, பாவனை, நடிப்பு, மொழி என அனைத்திலும் வித்தியாசத்தை காட்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

Image Courtesy – Twitter

குறிப்பாக ‘மனசிலாயோ சாரே’ என அவர் பேசிய டயலாக் மக்களிடைம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் திரையைப் பகிர்ந்து கொண்ட விநாயகன், 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ் சினிமாவின் முக்கிய வில்லனாக கருதப்படுகிறார்.

‘மாமன்னன்’ ஃபஹத் பாசில்:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த திடைப்படம் ‘மாமன்னன்’. இப்படத்தில் வில்லனாக நடித்தவர் ஃபஹத் பாசில். படத்தில் அரசியல்வாதியாக வரும் ஃபஹத் பாசில் தனது கொடூர வில்லத்தனத்தை காட்டியிருப்பார். அடி, உதை, கொலை என கொடூரமன வில்லனாக திகழ்ந்தவர் ஃபஹத் பாசில்.

Image Courtesy – Twitter

ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் ஃபஹத் பாசில் நடிப்பால் ஈர்க்கப்பட்டு அவருக்கென தனி கூட்டமே கூடியது. ‘மாமன்னன்’ படத்தில் வரும் ஃபஹத் பாசிலின் காட்சிகளை வைத்து வீடியோக்கள் எடிட் செய்து ட்ரெண்டு செய்து வந்தனர் ரசிகர்கள். 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களில் முக்கிய வில்லனாக ஃபஹத் பாசில் இடம் பிடித்தார்.

‘மார்க் ஆண்டனி’ எஸ்.ஜே.சூர்யா:

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தில், விஷாலுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். இருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருக்கின்றனர்.

காமெடி கலந்த அவரது வில்லத்தனம் காண்போரை கவர செய்கிறது. குறிப்பாக, விஷாலை தீர்த்துக்கட்ட திட்டம்போட்ட எஸ்.ஜே.சூர்யா சில்க் ஸ்மிதாயை கண்டவுடன் ‘சிலுக்கா…!’ என கூறும் வசனங்களும், நடிப்பும் காண்போரை ரசிக்க வைத்தது.

Image Courtesy – Twitter

தொடர்ந்து, வயதான எஸ்.ஜே.சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பு மக்களிடம் சென்று சேர்ந்தது. தொடர்ந்து அவர் மாறுபட்ட கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

‘போர் தொழில்’ சரத் பாபு:

நடிகர்கள் அசோக் செல்வன், சரத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியான கிரைம் திரில்லர் படம் ‘போர் தொழில்’. இந்த படத்தில் நடிகர் சரத்பாபு வில்லனாக நடித்தார். வில்லன் கதாபாத்திரங்களின் வழக்கமான வடிவத்தை உடைத்து சரத் பாபு நடித்திருப்பார்.

Image Courtesy – Twitter

அடக்கமான தோற்றம், கடுமையான பதில்கள் விரிவான உரையாடல்கள் ஆகியவைகள் உடல்ரீதியான சண்டைக் காட்சிகளைவிட மிகவும் அச்சுறுத்தலாக இருந்தன. அவரது தலைசிறந்த நடிப்பு, கதாப்பாத்திரத்தில் ஆச்சரியமூட்டும் திருப்பத்துடன், 2023ஆம் ஆண்டின் தமிழ் வில்லன்களில் ஒருவராக சரத் பாபுவின் நிலையை உறுதிப்படுத்தியது.

‘வாரிசு’ பிரகாஷ் ராஜ்:

2023ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தன்று வெளியான திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்திருப்பார். கில்லி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜின் நடிப்பு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.

மேலும், பிரகாஷ் ராஜின் ‘செல்லமே’ என்ற டையலாக் இன்றும் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், இருவரும் நடித்13 வருட இடைவெளிக்குப் பிறகு இருவரும் நடித்ததால் ரசிகர்கள் ஆவலுடன் பிரகாஷ் ராஜின் வில்லத்தனத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

Image Courtesy – Twitter

இருவருக்கும் இடையே உடல்ரீதியான மோதல்கள் இல்லாவிட்டாலும், வார்த்தைகள் மற்றும் சவால்களில் இருவரும் மோதிக்கொண்டது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் மோதிய பிரகாஷ் ராஜின் வில்லத்தனத்தை மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

இதையும் படிங்க: ‘ஃபாரின் கேர்ளுடன் ஊர் சுற்றிய விஷால்’.. வீடியோ எடுப்பதைக் கண்டு தெறித்து ஓட காரணம் என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here