இயக்குநர் ஜெ.எஸ்.பி. சதீஷ் இயக்கத்தில் ஷில்பா மஞ்சுநாத் மற்றும் ஆர்த்தி நடிப்பில் ஆகியோரது நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘சிங்கப் பெண்ணே’. இந்த படம் பெண் குழந்தைகள் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் நடந்த நீச்சல், மிதிவண்டி, ஓட்டப் பந்தயம் போன்ற போட்டிகளில் கலந்துகொண்டு பலமுறை வெற்றி பெற்ற வீராங்கனை ஆர்த்தி தான் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தில் நம்பியாரின் பேரன் தீபக் நம்பியார் வில்லனாக நடிக்கிறார். குமரன் சிவமணி இசையமைக்கிறார். இந்த படத்தில் இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், ‘சிங்கப் பெண்ணே’ படத்தின் நிகழ்ச்சியில் இயக்குநர் பாக்கியராஜ் கல்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “உண்மையான சிங்கப்பெண்களை வைத்து படத்தை உருவாக்கிய குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.
ஆர்த்தி மற்றும் அவரது பெற்றோருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக இருக்கும் குமரன் சிவமணிக்கு வாழ்த்துகள்.
அவருக்கு அவரது தந்தையிடம் இருந்து இசை வந்திருக்கும். குமரன் சிவமணி அவரது அப்பாவின் பெயரை காப்பாற்றி இருக்கிறார்” என பேசினார். ‘சிங்கப் பெண்ணே’ படம் வருகிற மார்ச் 8ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.