பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘பக்ஷக்’ டிரைலர்..!

0
100

நடிகர் பூமி பெட்னேகர், ‘பக்ஷக்’ (Bhakshak) திரைப்படத்தில் புலனாய்வு பத்திரிகையாளராக நடித்துள்ளார். புல்கிட் இயக்கும் இந்த படம், ஹிந்தி மொழியின் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இந்த படம், நீதி தேடும் ஒரு பெண்ணின் முயற்சியின் பயணத்தை ஆராய்கிறது.

இந்த ‘பக்ஷக்’ படத்தில், பூமி பெட்னேகர் ஒரு பெண் காப்பகத்தில் உள்ள குழந்தைகளின் பாலியல் வன்கொடுமை வழக்கைப் பார்க்கிறார். அதனடிப்படையில் இந்த படத்தின் கதை நகர்கிறது என நடிகர் பூமி பெட்னேகர் கூறினார்.

இது குறித்து நடிகர் பூமி பெட்னேகர் பேசுகையில், “பத்திரிகையாளரின் வாழ்க்கை ஒரு கடினமானது. சரியான கேள்விகளைக் கேட்பதற்கு, குறிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்களிடம் நிறைய தைரியம் தேவை. அச்சமின்றி கேள்விகள் கேட்பதற்கு கண்டிப்பாக நிறைய தைரியம் வேண்டும்.

அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் தங்கள் பணியை நேர்மையாகவும் அச்சமின்றியும் செய்ததற்காக அவர்களுக்கு எனது வணக்கம். இந்தப் படத்தில் பணியாற்றியதன் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன். இதனால், நான் கௌரவமாக உணர்கிறேன்” என தெரிவித்தார்.

இந்த நிலையில், தற்போது ‘பக்ஷக்’ (Bhakshak) படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பூமி பெட்னேகர் பத்திரிகையாளராக நடித்துள்ள இந்த ‘பக்ஷக்’ படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த படத்தில் சஞ்சய் மிஸ்ரா, சாய் தம்ஹங்கர் மற்றும் ஆதித்ய ஸ்ரீவஸ்தவா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இந்த படம் வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி Netflix-ல் பிரீமியர் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்க ரசிகர்களுக்காக அப்டேட் கொடுத்த ‘லால் சலாம்’ படக்குழு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here