பிக்பாஸில் கமலுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?.. ஷாக் ஆன ரசிகர்கள்..!

0
115

Bigg Boss Tamil 7: பிரபல தனியார் தொலைக்காட்சியில் 2017ஆம் ஆண்டு முதன்முதலாக அறிமுகமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது ஏழாவது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னதாக, வெளிநாட்டில் பிரபலமாக இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, பின்னர் இந்தியாவில் அறிமுகமானது.

முதன்முதலில் இந்தியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர், அனைத்து மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சி, ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் முடியும் வகையில் ஒளிபரப்பாகி வந்தது.

ஆனால் கொரோனாவுக்குப் பிறகு அக்டோபரில் தொடங்கி ஜனவரி மாதத்தில் முடியும்படி மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான பிக் பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி முடிவடைகிற தருனத்தில் உள்ளது. இந்த நிலையில், தற்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசனின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு நாளுக்கு 1.50 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஒரு நாள் என்றால் வாரத்தில் இரண்டு நாள்கள் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியாகும். அவரின் சம்பளம் ஒவ்வொரு சீசனுக்கும் உயர்ந்து வரும் நிலையில் 5ஆவது சீசனில் 60 கோடி, 6ஆவது சீசனில் 80 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற அவர் இந்த சீசனில் 1.50 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ராசி பார்த்து சம்பளம் வாங்கும் அஜித்?.. அடுத்த படத்தின் சம்பளம் இத்தனை கோடியா?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here