தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுல் ஒருவர் அஜித்குமார். இவர் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. சினிமாவில் நடிகர் அஜித் பல சோதனைகளை சந்தித்துக்கொண்டிருந்த போது அவருக்கு ஒரு சில படங்கள் மட்டும் ஹிட் அடித்து அவரை தூக்கிவிட்டது.
அந்த வரிசையில் மிக முக்கியமான படம் ‘பில்லா’. இந்த படம் அஜித்திற்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான பில்லா படத்தை ரீமேக் செய்து 2007ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மாபெரும் ஹிட்டானது.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் நயன்தாரா, நமீதா, சந்தானம், பிரபு உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடித்திருந்தனர். பில்லா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பில்லா 2 உருவாக்கப்பட்டது.
ஆனால், பில்லா பார்ட் 2 படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், ‘பில்லா’ திரைப்படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.