‘விஜய் சேதுபதி இந்தி படங்களில் நடிக்கலாமா?.. இந்தி தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கலாமா?..’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

0
100

நடிகர் விஜய் சேதுபதி நேற்று மெரி கிறித்துமஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, விஜய் சேதுபதியிடம், “ஹிந்தி தெரியாது போடா, என்கின்ற வசனங்களை நாம் கூறுகிறோம் ஆனால் நீங்கள் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கின்றீர்களே இது நியாயமா?” என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, “இங்கே ஹிந்தி திணிப்பு தான் வேண்டாம் என்று கூறுகின்றனர், ஹிந்தி படிக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. இப்போ எதுக்கு இந்த கேள்வி? என கோபமாக பதில் கூறினார்.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது, ‘‘ஜவான் படத்துல விஜய் சேதுபதி வில்லனாக சிறப்பாக நடித்திருந்தார். சப் டைட்டில் இல்லாமல் அதை பார்த்தால், அது இந்தியை திணிப்பதா? கற்றுகொடுப்பதா? அது விவாத பொருள். இந்தி உங்களுக்கு பிடிக்குமா? பிடிக்காதா என்பதுதான் விடயம்.

ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவன தயாரிப்பில் அவர் நடிக்கிறார். விஜய் சேதுபதி கருத்து எதுவும் சொல்லவில்லை. அது அவர் உரிமை. அவர் இந்தி, போஜ்புரி, தமிழ் என எதிலும் நடிக்கட்டும், அது அவரது உரிமை. அதே சமயம் கருத்துக்கு சொல்லும்போது இரண்டு பக்கமும் பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் பல நிறுவனங்கள் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் இந்தியா முழுக்க, வட இந்தியாவில் இருந்து ஆட்களை வேலைக்கு எடுக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டை விட பெங்களூர் சரியாக இருக்கும், அங்கே மொழி பிரச்சினை இல்லை. இங்கே தமிழில்தான் பேச வேண்டியது இருக்கிறது என்கின்றனர்.

இதுபோன்ற மொழி பிரச்சினையால் தமிழகத்தில் முதலீடு வாய்ப்புகள் குறைகிறது. இந்தி விருப்பம் இருந்தால் படியுங்கள், வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள். நாங்கள் மூன்று மொழி கொள்கையை சொல்றோம். இந்தி படியுங்கள் என பிரதமர் மோடி சொல்லவில்லை.

கட்டாயம், தமிழ், ஆங்கிலம் படிக்க வேண்டும். 3ஆவது மொழியாக உங்களுக்கு தேவைப்படும் மொழியை படியுங்க என்கிறோம். இது எங்க கருத்து, விஜய் சேதுபதிக்கு பதில் அல்ல, 4, 5 மொழி கூட படியுங்க. நாளைக்கு நீங்க குளோபல் சிட்டிசன். நாளை வெறும் 2 மொழிவைத்துக் கொண்டு எங்கேயும் போக முடியாது. கூடுதல் மொழி தேவைப்படும்.

இந்தி பிடிக்காவிட்டால் பிரெஞ்சு, ஜெர்மன் படித்து ஐரோப்பாவில் வேலை செய்யுங்க. இந்தியை நாங்க திணிக்கவில்லை. அதேசமயம், விஜய் சேதுபதி இந்தி படங்களில் நடிக்கலாமா? இந்தி தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கலாமானு கேட்க மாட்டோம்.

அவர் அவரின் தனித் திறமை. அவர் விருப்பம். நாங்க ஏதாவது சொன்னால் தவறாக போய்விடும். அவர் படத்தை நாங்க கைதட்டி ரசித்துவிட்டு போறோம்” என பதிலளித்துவிட்டுச் சென்றார்.

இதையும் படிங்க: ‘ஏற்றி விடும் ஏணிகளை எட்டி உதைக்கும் வடிவேலு’ – ப்ளூ சட்டை மாறன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here