‘ஏற்றி விடும் ஏணிகளை எட்டி உதைக்கும் வடிவேலு’ – ப்ளூ சட்டை மாறன்!

0
176

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், ரஜினி, கமல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், சமீபத்தில் காமலான கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு செல்லாத நடிகர் வடிவேலு, கலைஞர் 100 விழாவில் கலந்து கொண்டார். இதனால் சமூக வலைதளங்களில் பலரும் அவரை வசைப்படி வருகின்றனர்.

அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன், வடிவேலு குறித்து தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஏற்றி விடும் ஏணிகளை எட்டி உதைக்கும் வடிவேலு, சில தினங்களுக்கு முன்பு கலைஞர் 100 நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

விழாமேடைக்கு கார் பார்க்கிங்கில் இருந்து பேட்டரி கார் மூலம் முக்கிய திரையுலகினர் அழைத்து செல்லப்பட்டனர். அதில் ஆறேழு பேர் பயணம் செய்யலாம்.

ஆளுக்கு ஒரு பேட்டரி கார் வருமென நினைத்திருந்தார்கள். ஆனால் ஏற்கனவே சோனியா அகர்வால் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே நயன்தாரா அமர வைக்கப்பட்டதால். அப்செட் ஆனார் அவர்.

அடுத்து வடிவேலு வந்தார். பேட்டரி காரில் ராஜ்கிரணுக்கு அருகே அமர்வோம் என அவர் எதிர்பார்க்கவில்லை. அதனால் கடுப்பான வடிவேலு. உடனே வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு கீழே இறங்கிவிட்டார். ராஜ்கிரணை ஏறிட்டு கூட பார்க்கவில்லை.

அதன்பிறகு வந்த பேட்டரி காரில் டிரைவருக்கு அருகே அமர்ந்து விழா மேடைக்கு சென்றார். நிகழ்ச்சியில் பேசியும், பாடியும் கைத்தட்டல் வாங்க ஒத்திகை பார்த்துவிட்டு வந்தவருக்கு. அந்த வாய்ப்பு அமையாமல் போனதால் அதிருப்தி அடைந்தார்.

வடிவேலுவின் வளர்ச்சிக்கு வாய்ப்பு அளித்தவர்கள் ராஜ்கிரணும், கேப்டனும். டி.ராஜேந்திரன் என் தங்கை கல்யாணி படத்தில் அறிமுகமாகி அதில் சில நொடிகள் நடித்தார்.

அதன்பிறகு முறைப்படி அவரை அழைத்து காமடி கேரக்டரும், ஒரு பாடல் காட்சியும் அளித்து உதவியர் ராஜ்கிரண். அடுத்து சின்னக்கவுண்டரில் வாய்ப்பு தந்தார் விஜயகாந்த்.

என் ராசாவின் மனசில், சின்னக்கவுண்டர் படங்களில் ஏற்கனவே கவுண்டமணி, செந்தில் போன்ற காமெடியன்கள் இருக்கும்போது இவர் எதற்கு என மற்றவர்கள் கூறியும் ‘பரவாயில்லை. திறமைசாலி. வாய்ப்பு அளிக்கலாம்’ எனக்கூறி கைதூக்கி விட்டார்கள் ராஜ் கிரணும், கேப்டனும்.

தனக்கு வாழ்வளித்த ராஜ்கிரணை கூட பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருக்கிறார் வடிவேலு” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: LIC படத்திற்கு LIC நிறுவனம் நோட்டீஸ்..! டைட்டிலை மாற்ற கோரிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here