ஆட்டம் போட்ட அஜித்..! கிழித்தெறிந்த ப்ளூ சட்டை மாறன்..! என்ன காரணம்?..

0
106

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படம் அஜர்பைஜானில் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சமீபத்தில் காலமான விஜயகாந்த்தின் இறுதி அஞ்சலிக்கு கூட அஜித் வரவில்லை என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புத்தாண்டு அன்று துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் வெளிநாட்டு பெண் ஒருவருடன் நடிகர் அஜித் நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதனைக் கண்ட பலரும், ‘சமீபத்தில் உயிரிழந்த விஜயகாந்த்தின் இறுதி அஞ்சலிக்கு வராத நடிகர் அஜித் துபாயில் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்’ என விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் இது குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘விஜயகாந்த் இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை. வெளிநாட்டில் ஷூட்டிங் என காதுகுத்திய பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள்.

ஆங்கில புத்தாண்டை வெவ்வேறு நாடுகளில் கொண்டாடிவிட்டு சென்னை வருகிறார்கள், பின்னர், ஓரிரு நாட்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு. ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் ‘கலைஞர் 100’ கலை நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: லியோ படத்திற்கு தடை?.. லோகேஷ் கனகராஜ் மீது வழக்கு!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here