துபாயில் ‘புளூ ஸ்டார்’ நாயகர்கள்..! திரையரங்கிற்கு நேரடி விசிட்..!

0
98

‘Blue Star’: இயக்குநர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘புளூ ஸ்டார்’. இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இந்தப் படத்தை லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படம் உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜன.25ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் கதாநாயகன் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் துபாயில் ‘புளூ ஸ்டார்’ படம் வெளியாகியுள்ள திரையரங்கிற்கு நேரில் சென்று ரசிகர்களிடன் வரவேற்பு குறித்து கேட்டறிந்தனர்.

இது குறித்த வீடியோவை நீலம் புரொடக்ஷன்ஸ் தனது ‘X’ தளத்தில் பகிர்ந்துள்ளது. முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள திரையங்குகளுக்கு நேரில் சென்ற படக்குழுவிற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில் தற்போது துபாயிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here