நாளை ‘புளூ ஸ்டார்’ ஆடியோ லான்ச்.. படக்குழு அறிவிப்பு..!

0
87

‘Blue Star Audio Launch’: இயக்குநர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘புளூ ஸ்டார்’. இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும், இந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தை லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ‘புளூ ஸ்டார்’ படத்தின் ஆடியோ லான்ச் நாளை நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளது. ‘புளூ ஸ்டார்’ திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: ‘ஏதோ படமே ரிலீஸானது போல மகிழ்ச்சி’- ‘TEENZ’ பர்ஸ்ட் லுக் குறித்து பார்த்திபன் ட்வீட்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here