‘புளூ ஸ்டார்’, ‘தங்கலான்’ படங்கள் ரிலீஸ்.. பா.ரஞ்சித்திடம் கேள்வி எழுப்பிய ரசிகர்கள்!

0
94

‘Blue Star’: இயக்குநர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘புளூ ஸ்டார்’. இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இந்தப் படத்தை லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த நிலையில், ‘புளூ ஸ்டார்’ படம் குறித்து புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தப் படம் ஜனவரி 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு போஸ்டர் மூலம் பகிர்ந்துள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், ‘புளூ ஸ்டார்’ படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் நடிகர் விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இரு படங்கள் குறித்து ரசிகர்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய தங்கலான் படமும், பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புளூ ஸ்டார் படமும் ஒரே நேரத்தில் வெளியாகுவதால், ஒரே நேரத்தில் ஏன் இரண்டு படங்களை வெளியிடுகிறீர்கள்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: ராம் சரணின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here