‘புளூ ஸ்டார்’ வெற்றியை கொண்டாடிய பா.ரஞ்சித்..!

0
91

‘Celebrating Blue Star Success’: இயக்குநர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘புளூ ஸ்டார்’. இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இந்தப் படத்தை லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படம் உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜன.25ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் தயாரிப்பாளரான இயக்குநர் பா.ரஞ்சித் படக்குழுவுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: இணையத்தில் வைரலாகும் ‘ஹே சுனாமிகா’ பாடல்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here