வெளியானது ‘புளூ ஸ்டார்’ படத்தின் டிரைலர்..!

0
123

‘Blue Star’: இயக்குநர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘புளூ ஸ்டார்’. இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும், இந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஜனவரி 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு போஸ்டர் மூலம் பகிர்ந்தது. இந்த நிலையில், ‘புளூ ஸ்டார்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: வெளியானது ‘அயலான்’ படத்தின் ‘மாஞ்சா நீ’ பாடல்.. ரசிகர்கள் வரவேற்பு..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here