அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி..!

0
82

Amitabh Bachchan: பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். இவரது மகன் அபிஷேக் பச்சனும் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர், பாலிவுட் நடிகை ஐஷ்வர்யா ராயை திருமணம் செய்துள்ளார்.

81 வயதாகும் அமிதாப் பச்சனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அமிதாப் பச்சனுக்கு இதயத்தில் ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here