தனுஷ் படத்தில் இணையும் பாலிவுட் நடிகர் ஜிம் சர்ப்..!

0
64

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, தனுஷ் நடிக்கும் 50ஆவது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதனைத் தொடர்ந்து, அவரது 51ஆவது படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான சேகர் கம்முலா இயக்குகிறார்.

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஜிம் சர்ப் என்பவரும் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகிறது.

இந்த படத்தை தொடர்ந்து அவர் மீண்டும் தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘விராட்டா பரவம்’ படத்தின் இயக்குநர் உதுகுலா வேணு இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here