ஜான்வி – ஷிகர் காதலுக்கு ஓகே சொன்ன போனி கபூர்..!

0
102

ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் – மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி தம்பதிகளின் மூத்த மகள் ஜான்வி கபூர். பல்வேறு ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் பிரபல நடிகையாக ஜான்விகபூர் திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் ஜான்விகபூர் -ஷிகர் பஹாரியா என்பவரை காதலித்து வருகிறார். இவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் ஆவார்.

இருவரும் காதலிக்கும்போது பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்தனர். ஜான்விகபூர் – ஷிகர் பஹாரியா அடிக்கடி உணவகங்கள், பப்களில் ஜோடியாக வலம் வந்தனர்.

சமீபத்தில் ஜான்வி கபூரின் 27- வது பிறந்தநாளை யொட்டி காதலன் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி கோவிலுக்கு ஜோடியாக சென்று சாமி கும்பிட்டனர். இந்த காதல் ஜோடிகளின் புகைப்படங்கள் வைரலாக பரவியது.

இந்த நிலையில் போனிகபூர் தனது மகள் ஜான்வி கபூர் – ஷிகர் பஹாரியா ஆகியோரது காதலை ஏற்றுக்கொண்டார். அதுகுறித்து போனிகபூர் மனம் திறந்து பேசி உள்ளார்.

அப்போது, “ஜான்வி- ஷிகர் காதலை மனமார வரவேற்கிறேன். விரைவில் பெற்றோர்களிடம் உரிய முறையில் பேசி திருமண ஏற்பாடுகள் நடைபெறும்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here