யூடியூப் டிரெண்டிங்கில் ‘பூமர் அங்கிள்’ டிரைலர்..!

0
104

Boomer Uncle: அறிமுக இயக்குநர் ஸ்வதீஸ் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘பூமர் அங்கிள்’. இந்த படத்தில் ஓவியா, எம்.எஸ்.பாஸ்கர், பாலா, தங்கதுரை உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர்.

முன்னதாக இந்த படத்திற்கு ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என பெயரிடப்பட்ட நிலையில் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக ‘பூமர் அங்கிள்’ என பெயர் மாற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது ‘பூமர் அங்கிள்’ படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த டிரைலர் தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் நம்பர் 10-ல் உள்ளது. மேலும், ‘பூமர் அங்கிள்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ‘Rise of Miller’.. வெளியானது ‘கேப்டன் மில்லர்’ புதிய பாடல்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here