வேற லெவலில் வைரலாகும் ‘பிரம்மயுகம்’ டிரைலர்..!

0
136

‘Bramayugam Trailer’: இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள திரைப்படம் ‘பிரம்மயுகம்’. இந்த படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டாலிஸ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ராமச்சந்திர சக்கரவர்த்தி மற்றும் எஸ்.சஷிகாந்த் ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும், கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் வெளியான ‘பிரம்மயுகம்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. சமீபத்தில் இந்த படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

மேலும், ‘பிரம்மயுகம்’ திரைப்படம் பிளாக் அண்ட் வொயிட் ஆக வெளிவரவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், ‘பிரம்மயுகம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், இந்த படத்தின் டிரைலர் அபுதாபியில் நடைபெற்றது.

தொடர்ந்து படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. மேலும், வரும் பிப்ரவரி 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here