‘பிரம்மயுகம்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

0
178

‘Bramayugam OTT’: இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள திரைப்படம் ‘பிரம்மயுகம்’. இந்த படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டாலிஸ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ராமச்சந்திர சக்கரவர்த்தி மற்றும் எஸ்.சஷிகாந்த் ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும், கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 15ஆம் தேதி உலக அளவில் திரையரங்குகளில் ரிலீஸாகி மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

பிளாக் அண்ட் வொயிட்டில் வெளியான ‘பிரம்மயுகம்’ படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். படம் ரிலீஸான முதல் நாளில் 3.1 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 2.5 கோடி ரூபாய்க்கு வசூல் செய்தது.

தொடர்ந்து, படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், மூன்றாவது நாள் மட்டும் கேரளாவில் 140 திரையரங்குகள் அதிகரித்தது. தொடர்ந்து, மூன்றாம் நாள் கேரளாவில் மட்டும் ரூ.8.5 கோடி வசூல் செய்தது.

தொடர்ந்து ‘பிரம்மயுகம்’ படத்தின் வரவேற்பு அதிகரிக்கவே படத்தின் வசூலும் அதிகரித்தது. அதன் படி இந்த படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘பிரம்மயுகம்’ படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பிரம்மயுகம்’ படம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பிரம்மயுகம்’ படம் வருகிற மார்ச் 15ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது. தொடர்ந்து, திரையரங்குகளில் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரித்த நிலையில் தற்போது ஓடிடியிலும் படத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here