100 கோடி கிளப்பில் இணைந்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம்!

0
135

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் ஜன.12 உலகளவில் வெளியானது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

பல்வேறு பிரச்சினைகளுக்குப் பின்னர் ரிலீஸ் ஆன ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். மேலும், படம் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அதிக வசூல் பெற்று வந்தது. இதன் காரணமாக கடந்த 14 நாட்களில் 105 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

முன்னதாக கேப்டன் மில்லர் படத்துடன் இணைந்து ரிலீஸான அயலான் படம் அதிக வசூல் செய்த நிலையில் கேப்டன் மில்லர் படம் பின் தங்கியது. ஆனால் கடந்த சில நாட்களாக கேப்டன் மில்லர் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here