‘தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி’ – ‘கேப்டன் மில்லர்’ படக்குழு!

0
86

சென்னை: இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படம் வரலாற்று பாணியில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வருகிற 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், கேப்டன் மில்லர் படக்குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது.

அந்த பதிவில், “கேப்டன் மில்லர் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியதற்காக நாங்கள் தமிழ்நாடு அரசிற்கும், முதலமைச்சருக்கும் மிகவும் தாழ்மையுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு திரைப்பட விருது: விண்ணபிக்க கால அவகாசம் நீடிப்பு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here