‘Captain Miller’: ‘கேப்டன் மில்லர்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு..!

0
156

‘Captain Miller’: இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் திரைக்குவரவிருக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கைன், அதிதி பாலன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மேலும், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜனவர் 12ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. மேலும், இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

‘கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தின் மூன்றாவது பாடலான ‘கோரனாரு’ என்ற பாடல் இன்று (ஜன.02) வெளியாகியுள்ளது. இந்த பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ‘ஆத்தி.. கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா’!.. வடிவேலு பாணியில் படத்தின் அப்டேட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here