‘Captain Miller’ Second Single – ‘கேப்டன் மில்லர்’ படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை வெளியீடு..!

0
115

‘Captain Miller’ : இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கைன், அதிதி பாலன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மேலும், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் 2024ஆம் ஆண்டு பொங்கலுக்குத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது ஒரு புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை (டிச.23) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக சத்யஜோதி பிலிம்ஸ் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், இது குறித்த வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 2024 ஜனவரி 3ஆம் தேதி நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here