‘I am the Devil’ – அதிரடி காட்டும் ‘கேப்டன் மில்லர்’ டிரைலர்..!

0
144

‘Captain Miller Trailer’: இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் திரைக்குவரவிருக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கைன், அதிதி பாலன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மேலும், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜனவர் 12ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. மேலும், இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

‘கேப்டன் மில்லர்’ படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டிரைலர் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது.

மாஸ் பிஜிஎம், மிரட்டலான சண்டை காட்சிகள், டையலாக் என அதிரடியாக வெளியான ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டிரைலரைக் கண்டு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது?.. ரசிகர்களின் கேள்விக்கு படக்குழு பதில்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here