ஓடிடியில் வெளியாகும் ‘கேப்டன் மில்லர்’..! ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

0
91

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கடந்த மாதம் 12ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில் முதல் வாரத்தில் ரூ.61 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படம் வருகிற 9ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாக உள்ளது. படம் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க தவறிய ரசிகர்கள் ஓடிடியில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here