இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில் முதல் வாரத்திலே ரூ.61 கோடி வசூல் செய்தது தொடர்ந்து படத்தின் வசூலும் அதிகரித்தது.
இந்த நிலையில் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த படம் பிப்ரவரி 9ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. தொடர்ந்து இந்த படத்திற்கான ஹைப் குறையாத நிலையில், தற்போது ‘கேப்டன் மில்லர்’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நம்பர் 1 இடத்தில் டிரெண்டாகி வருகிறது.
மேலும், இந்த படம் ரிலீஸாகி 40 நாட்களை ஆன நிலையிலும் உலகளவில் 9க்கும் மேற்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், இந்தியா உள்பட ஒன்பது நாடுகளில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.