‘கேப்டன் மில்லர்’ வெற்றி.. தனுஷுக்கு மாலை அணிவித்து வாழ்த்திய தயாரிப்பாளர்…!

0
39

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் நேற்று (ஜன.12) உலகளவில் வெளியானது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

பல்வேறு பிரச்சினைகளுக்குப் பின்னர் ரிலீஸ் ஆன ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். மேலும், படம் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் நடிகர் தனுஷை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்தியுள்ளார். இது குறித்த புகைப்படத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ தனது ‘X’ வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில், ‘வின்னர் வின்னர் கேப்டன் மில்லர்… உலகம் முழுவதும் இந்த பிளாக்பஸ்டர் வரவேற்பை கொடுத்த ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: நயன்தாராவுக்கு எதிராக மராட்டியத்தில் மேலும் ஒரு வழக்கு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here