‘மறைந்தும் பசியை போக்கும் கேப்டன்’..! நினைவிடத்தில் தினமும் மதிய உணவு வழங்க திட்டம்’..!

0
130

‘Captain Vijayakanth’: கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிச.28ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

நேரில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள், விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து, பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள், நடிகர்கள் என ஏராளமானோர் தற்போது வரை தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு அஞ்சலி செலுத்த வரும் மக்களுக்கு விஜயகாந்த்தின் மகன்கள் உணவு வழங்கி அவர்களது பசியைப் போக்கி வருகின்றனர். தொடர்ந்து, தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தினமும் மதிய உணவு வழங்கவுள்ளதாக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்கள் இந்த மதிய உணவு திட்டத்தை எடுத்து நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. கேப்டன் விஜயகாந்த் தன்னிடம் பசி என்று யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு வழங்கி அழகு பார்த்தவர். திரைத்துறையில் உணவுக்காக பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் கேப்டன்.

அந்த வகையில், அவரது தொண்டர்கள் இனிவரும் நாள்களில் நாள்தோறும் மதிய உணவு வழங்க திட்டமிட்டுள்ளனர். இதேபோல், நடிகர்கள் சிலரும் தங்களால் முடிந்த அளவு மக்களின் பசியைப் போக்கவுள்ளதாக கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் புகழ் தனது அலுவலகத்தில் மதிய உணவு வழங்கவுள்ளதாக அறிவித்தார்.

அதேபோல், நடிகர் அருண் விஜய், இனிமேல் தனது படப்பிடிப்புகளில் தான் என்ன உணவு சாப்பிடுகிறாரோ அதே உணவை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அனைவருக்கும் வழங்கவுள்ளதாக கூறியிருக்கிறார். மனிதம் பேசிய மகத்தான தலைவன் கேப்டனின் மகத்தான செயல் இன்று அனைவராலும் பின்பற்றுவது போற்றத்தக்கது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: கேப்டன் உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here