விதிகளை மீறி பங்களா கட்டும் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா?.. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?.. நீதிமன்றம் கேள்வி!

0
77

கொடைக்கானலில் விதிகளை மீறி பங்களா கட்டுவதாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: கொடைக்கானலில் விதிகளை மீறி பங்களா கட்டி வரும் நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி எழுப்புயுள்ளது. கொடைக்கானலில் விதிகளை மீறி நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் பங்களா கட்டி வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் பங்களா கட்டியுள்ளனர். நகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமலும், விதிகளை பின்பற்றாமலும் கட்டடங்கள் எழுப்பியுள்ளனர். இதனால் மண் சரிவு ஏற்பட்டு அருகில் உள்ள வீடுகளும் இடிவதற்கு சாத்தியங்கள் உள்ளது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்றபோது, இரண்டு கட்டடங்களின் கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை பதிவு செய்த உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதிகள், பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீதும் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என கேள்வி எழுப்பியது. மேலும், இந்த வழக்கில் தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இதையும் படிங்க: இனிமேல் தமிழ் படங்களுக்கு நோ..! பாலிவுட்டுக்கு தாவும் விஜய் சேதுபதி?.. என்ன காரணம்?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here