‘அன்னபூரணி’ பட விவகாரம்: நயன்தாரா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

0
53

‘Annapoorani’: இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அன்னபூரணி’. இந்த படம் சமீபத்தில் ‘நெட்பிளிக்ஸ்’ ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு கிடைக்காத நிலையில், ஓ.டி.டி.யில் படம் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியது.

ஆனால், அதற்குள் ‘அன்னபூரணி’ படத்திற்கு எதிராக போராட்டம் கிளம்பியது. இந்த படத்தில் இந்து மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதாக இருப்பதாகவும் பஜ்ரங்தள் அமைப்பினர், மும்பை ஓசிவாரா காவல் நிலையத்தில் கடந்த 3 நாள்களுக்கு முன்னர் புகார் அளித்தனர்.

இதையும் படிங்க: திடீரென ‘அன்னபூரணி’ படத்தை நீக்கிய நெட்பிளிக்ஸ்.. என்ன காரணம்?..

இதற்கிடையே, இந்து தகவல் தொழில்நுட்பப் பிரிவு அமைப்பின் நிறுவனர் ரமேஷ் சோலங்கி, தென் மும்பையில் உள்ள லோக்மான்ய திலக் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், “நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படத்தில் கடவுள் ராமரை இழிவுபடுத்தியதுடன், இந்து மதத்தின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

கோயில் பூசாரியின் மகளாக நடித்துள்ள நயன்தாரா, கடைசி காட்சியில் பிரியாணி செய்வதற்கு முன்பு ஹிஜாப் அணிந்து நமாஸ் செய்வதாக காட்டப்பட்டுள்ளது. மற்றொரு காட்சியில் நயன்தாரா நண்பராக வரும் பர்கான் இறைச்சி வெட்டும்படி அவரை மூளை சலவை செய்கிறார்.

அதுமட்டும் இன்றி ராமரும், சீதாவும் இறைச்சி சாப்பிட்டவர்கள் என கூறுகிறார். எனவே நடிகை நயன்தாரா, இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா மற்றும் படத்தில் தொடர்புடையவர்கள் மீது மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘Rise of Miller’.. வெளியானது ‘கேப்டன் மில்லர்’ புதிய பாடல்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here