லியோ பட இயக்குநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு..! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்..!

0
121

‘Lokesh Kanagaraj’: லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழு மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய திரைப்படம் ‘லியோ’. இந்தப் படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வந்தது. இந்த நிலையில், லியோ பட இயக்குநர் மற்றும் படக்குழு மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ராஜாமுருகன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு குறித்த விசாரணை நேற்று (ஜன.03) நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெறவிருந்தது. ஆனால், விசாரணையின் போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி இந்த வழக்கு விசாரணை இன்று (ஜன.04) மீண்டும் நடைபெற்றது. அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரார் தரப்பு வழக்கறிஞர், “லியோ திரைப்படத்தை தடை செய்யவேண்டும். இதுபோன்று தான், நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘நியூ’ திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து ஆஜரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தரப்பு வழக்கறிஞர், “இது விளம்பரத்திற்காக எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் தொடரப்பட்ட வழக்கு” என குறிப்பிட்டார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், “லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள் உள்ளன?

எந்தெந்த இடங்களில் உள்ளன? என்பது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தரப்பு விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: லியோ படத்திற்கு தடை?.. லோகேஷ் கனகராஜ் மீது வழக்கு!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here