நயன்தாராவுக்கு எதிராக மராட்டியத்தில் மேலும் ஒரு வழக்கு!

0
121

இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அன்னபூரணி’. இந்த படம் சமீபத்தில் ‘நெட்பிளிக்ஸ்’ ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு கிடைக்காத நிலையில், ஓ.டி.டி.யில் படம் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியது.

ஆனால், அதற்குள் ‘அன்னபூரணி’ படத்திற்கு எதிராக போராட்டம் கிளம்பியது. இந்த படத்தில் இந்து மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதாக இருப்பதாகவும் பஜ்ரங்தள் அமைப்பினர், மும்பை ஓசிவாரா காவல் நிலையத்தில் கடந்த 3 நாள்களுக்கு முன்னர் புகார் அளித்தனர்.

தொடர்ந்து நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் மீது, பல்வேறு மாநிலங்களில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகிறது. நேற்று முன்தினம் மத்திய பிரதேச காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் தற்போது மராட்டியத்தில் தானேவைச் சேர்ந்த மிரா பயேந்தர், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நயன்தாரா உட்பட படக்குழுவினர் எட்டு பேர் மீது, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இரு பிரிவினரிடையே மோதலை துாண்டுவது, மத உணர்வுகளை புண்படுத்துவது, வழிபாட்டு தளத்தை அவமதிப்பது, கூட்டாக குற்றச் செயலில் ஈடுபடுவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘கேப்டன் மில்லர்’ ஒரு அருமையான படைப்பு – உதயநிதி ஸ்டாலின் பாராட்டு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here