உலகம் முழுவதிலும் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழ் சினிமா மற்றும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறித்து பார்க்கலாம்..
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த கடந்த 1981ஆம் ஆண்டு லதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெற்றது.
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான அஜித்குமார், கதாநாயகி ஷாலினியும் அமர்க்களம் படப்பிடிப்பின் போது காதல் வயப்பட்டு இருவரும் 2000ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு 2000ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுந்தர் சி இயக்குநராக அறிமுகமான ‘முறை மாமன்’ படத்தில் குஷ்பு கதாநாயகியாக நடித்திருந்தார்.
நடிகர் சரத்குமாரும், நடிகை ராதிகாவும் காதலித்து 2001ஆம் ஆண்டு வீட்டிலேயே திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிகை ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.
‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தின் மூலம் நடிகை சினேகா – பிரசன்னா இருவரும் காதல் வயப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இருவரும் 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
பிரபல முன்னனி இயக்குநரான அட்லீ, சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைப்பெற்றது.
நடிகர் ஆர்யா தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து வந்த நிலையில் இருவர் 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் வயப்பட்டு 2022ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நயன்தாரா. இவரும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் மூலம் காதல் வயப்பட்ட நிலையில் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் நடித்த தேவராட்டம் படத்தில் ஜோடியாக நடித்தவர் மஞ்சிமா மோகன். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட காதலால் 2022ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுல் ஒருவர் நடிகர் அசோக் செல்வன். இவரும் நடிகர் அருண்பாண்டியனின் மகளான நடிகை கீர்த்தி பாண்டியனும் 2023 செப்.13ஆம் தேதி காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
தமிழில் முன்னணி காமெடி நடிகரான் ரெடின் கிங்ஸ்லி. பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து வந்திருக்கிறார். இவர்களது காதல் வெளியில் தெரியாமல் இருந்த சூழலில் இவர்கள் மைசூரில் திருமணம் செய்துகொண்டார்.
தமிழ் சினிமாவை தொடர்ந்து பாலிவுட்டில் காதலித்து திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிகளைப் பார்க்கலாம்.
ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோருக்கு சஞ்சய் லீலா பன்சாலியின் ‘கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா’ படப்பிடிப்பின் போது காதல் ஏற்பட்டது. இவர்கள் 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
‘பிரம்மாஸ்திரா’ படத்தில் இணைந்து நடித்த ஜோடியான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோர் இந்த படத்தின் மூலம் காதல் வயப்பட்டனர். இருப்பினும், தங்களது உறவை மறைக்க நினைத்தனர். இந்தநிலையில் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘ஷெர்ஷாவின்’ படத்தின் மூலம் சித்தார்த் மல்ஹோத்ராவும் கியாரா அத்வானியும் டேட்டிங் செய்யத் தொடங்கினர். தொடர்ந்து நண்பர்கள் என கூறி வந்த நிலையில், 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
ஓம்காரா (2006) மற்றும் எல்ஓசி கார்கில் (2003) ஆகிய படங்களில் இணைந்து நடித்தவர்கள் கரீனா கபூர் மற்றும் சைஃப் அலி கான். 2008 ஆம் ஆண்டு தாஷான் படப்பிடிப்பு தளத்தில் கரீனா மற்றும் சைஃப் ஆகியோரது காதல் மலர்ந்தது. தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு அக்டோபர் 2012ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது.
ரிச்சா மற்றும் அலி ஃபசல் ஆகியோர் ‘ஃபுக்ரேயில்’ படத்தில் பணிபுரிந்தபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டுளது. இந்த ஜோடி ஆரம்பத்தில் 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டது, ஆனால் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.