Cell phone explosion: கடலூர் மாவட்டம் கண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பவர் தனது தாய் மற்றும் பாட்டியுடன் சுபநிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
செல்போன் வெடித்ததில் புஷ்பராஜுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால், வாகனம் கவிழந்த விபத்தில் புஷ்பராஜ், அவரது தாய், பாட்டி மூவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.
இந்த விபத்தைக் கண்ட அங்கிருந்தவர்கள் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூவருக்கும் அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், செல்போன் வெடித்ததற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.