‘பிரம்மயுகம்’ படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு..!

0
81

இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள திரைப்படம் ‘பிரம்மயுகம்’. இந்த படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டாலிஸ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ராமச்சந்திர சக்கரவர்த்தி மற்றும் எஸ்.சஷிகாந்த் ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும், கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் வெளியான ‘பிரம்மயுகம்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், தற்போது படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் மூலம் பகிர்ந்துள்ளது. மேலும், ‘பிரம்மயுகம்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 15ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: வெளியானது ‘கடவுளுக்கு கோரிக்கை’ வீடியோ பாடல்..! மிஷ்கினுக்கு குவியும் பாராட்டு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here