18 ஓடிடி தளங்களை முடக்கிய மத்திய அரசு..! என்ன காரணம்?..

0
114

OTT: மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள் மற்றும் 19 இணையதளங்களை முடக்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கூறியிருப்பதாவது, “ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த பத்து செயலிகள் மற்றும் 57 வலைத்தள கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள் மற்றும் 17 இணையதளங்களும் முடக்கி, மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் பலமுறை கொடுத்த எச்சரிக்கைகளை பொருட்படுத்தாததால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here