தேசிய விருதில் பல மாற்றங்கள்.. பரிசுத் தொகை உயர்வு..!

0
106

இந்திய திரைப்படங்களுக்கு ஆண்டு தோறும் தேசிய விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதினை ஜனாதிபதி வழங்குவார். அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான தேசிய சினிமா விருதுகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. தேசிய விருதுகளில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது.

இதற்காக அமைக்கப்பட்ட குழு தற்போது பரிந்துரையை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைக்கு அனுப்பி இருக்கிறது. இந்த குழிவில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக கூடுதல் செயலாளர் நீரஜா சேகர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த குழு பரிந்துரைத்துள்ள முக்கியமான அம்சங்கள் என்னவென்றால், சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது என்ற விருதில் இந்திரா காந்தி பெயர் நீக்கப்பட்டு, ‘இயக்குநரின் சிறந்த அறிமுக படத்துக்கான விருது’ என மாற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து, தேசிய ஒருமைப்பாட்டுக்காக வழங்கப்படும் ‘நர்கீஸ் தத்’ விருதில் நர்கீஸ் தத் பெயர் நீக்கப்பட்டும். நீக்கப்பட்டு ‘தேசிய, சமூக, சுற்றுச்சூழல் கோட்பாடுகளை வலியுறுத்தும் சிறந்த படம்’ என்று விருதின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்ட விருது பணம், இனிமேல் முழுமையாக இயக்குநருக்கு மட்டும் அளிக்கப்படும். திரையுலக ஆளுமைகளுக்கு வழங்கப்படும் ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கான பரிசுத்தொகை 10 லட்சத்தில் இருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதுபோல், பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் தங்கத்தாமரை விருதுக்கான பரிசுத்தொகை 3 லட்சம் ரூபாயாகவும், வெள்ளித்தாமரை விருதுக்கான பரிசுத்தொகை 2 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சிறந்த ஒலிப்பதிவுக்கான விருது, சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கான பரிசுத்தொகை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், இசைக்காக வழங்கப்படும் சிறந்த இயக்கத்துக்கான விருதை சிறந்த பின்னணி இசைக்கான விருது என மாற்றப்பட்டுள்ளது. சிறப்பு ஜூரி விருது நீக்கப்படுகிறது. ‘சிறந்த குடும்ப படம்’ என்ற விருது நீக்கப்பட்டு, ‘சிறந்த திரைக்கதை’ விருது அறிமுகப்படுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here