பொதுமக்களுக்கு எச்சரிக்கை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்..!

0
143

Heat waves: தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக  மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.  தொடர்ந்து தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இன்று (ஏப்ரல் 28) முதல் மே 2ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும் என்பதால் மக்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைபோலவே மேலும் சில மாநிலங்களிலும் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here