‘Chiyaan 62’: சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தை சிபு தமின்ஸ் தயாராகின்றார். இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் கதையாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் மீண்டும் தற்போது விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
விக்ரம் 62ஆவது படத்தின் எஸ்.ஜே.சூர்யாவுடன் சேர்ந்து மூன்று வில்லன் கதாபாத்திரங்கள் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா, பகத் பாசில் மற்றும் தெலுங்கில் ஒரு நடிகர் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.